2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

‘காதல் எங்கும் முளை விடும்’

Editorial   / 2017 நவம்பர் 23 , மு.ப. 11:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

இது ஒரு வித்தியாசமான கதை. தனது மேற்படிப்பைத் தொடர்வதற்காக இங்கிலாந்துப் பல்கலைகழகம் ஒன்றில் இணைந்து கொண்டவன், அதே பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் அந்த நாட்டின் பெண்ணைச் சந்தித்தான். அவளுக்கு எமது நாட்டின் பண்பாடு, கலை, கலாசாரம் பிடித்துப்போனதால் இவனது நடத்தைகளும் அவளைக் கவர்ந்து கொண்டது; இருவரும் அன்பினால் ஒன்றுபட்டார்கள்.  

கல்வி கற்று முடிந்ததுமே, அங்கே நல்ல வேலையும் பின்னர் அந்நாட்டுப் பிரஜாவுரிமையும் கிடைத்துவிட்டது. இந்நிலையில், தந்தையிடமிருந்து செய்தி ‘உடனே வா; உனது அம்மாவுக்குச் சுகவீனம்’. தாய்வீடு வந்தவனுக்கு அதிர்ச்சி. 

அவனைக் கண்டிப்பாக மிரட்டி, “தாங்கள் பார்த்த பெண்ணைக் கல்யாணம் செய்யாதுவிடின் செத்துவிடுவோம்” என்றனர். வேறுவழியில்லை. பிரம்பராட்சசி போல் அவளது நடத்தை. இலண்டனில் உள்ள காதலி, செய்தியறிந்து சோகமயமானாள். இதனிடையே பல இலட்சங்கள் கொடுத்து, விவாகரத்துப் பெற்றுக்கொண்டான்.  

எதிர்பாராத விதமாக அங்குவந்த, அவனது காதலி, கரிசனையுடன் அவனை அணைத்து, இனிநான் இவரைப் பொறுப்பேற்கின்றேன் என்றவள் புதுவாழ்வைக் காட்டக் கூட்டிச் சென்றாள். பண்பான காதல் எங்கும் முளை விடும்.  

     வாழ்வியல் தரிசனம் 23/11/2017

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X