2025 டிசெம்பர் 07, ஞாயிற்றுக்கிழமை

‘காதல் குதூகலமானது’

Editorial   / 2018 ஜூலை 27 , பி.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

காதலிப்பவன் கொடுத்து வைத்தவன் காதலிக்காதவன் விடுதலை பெற்றவன். எனினும், காதலின் போதைக்குள்ளும், சாதனைகள் புரிபவனே அதிபுத்திசாலியாக மாறுகின்றான். 

எதனையும் அனுபவித்துப்பார் என்று சொல்லுபவர்கள், பிரச்சினைகளுக்குள் பலரை வலிந்த இழுத்துத் தள்ளிவிடுவதும் உண்டு.

பல விடயங்களை நாங்களே முடிவுசெய்து, செய்ய வேண்டும். அடுத்தவனின் எண்ணப்படி செய்ய விழைவது, விழுந்து அல்லல்பட்டால் அவரை தூக்கி நிறுத்த, ஆலோசனை நல்கியவரே நழுவ விடுவதே அன்றாட காட்சியாகும். மென்மையான காதல் உணர்வு, ஒருவரை வசீகரப்படுத்தும்.

சிலர், அடுத்தவர்களது காதலை வரவேற்பவர்களாகவும் இருக்கின்றனர். காதலிக்கத் தெரியாதவனும் திருமணத்தின் பின்னர் மனைவியை முழுமையாக காதல் செய்வதை, தனது பூரணமான அன்பை முதுமையின் இறுதி இறப்பு வரை ஸ்திரமாகவே வைத்திருக்கிறான். காதல் குதூகலமானது.

வாழ்வியல் தரிசனம் 27/07/2018

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X