2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

‘காதல் வாழ்க்கையே மேன்மையானது’

Editorial   / 2017 நவம்பர் 27 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

அழகான அப்பாவி இளைஞன் அவன். எல்லோரும்தான் காதலிக்கிறார்களே, நானும் ஏன் காதலிக்கக்கூடாது என்ற ஆசையால் பல இளம் பெண்கள் பின்னால் சுற்றிப் பார்த்தான். ஒன்றும் பலிக்கவில்லை. வெறுத்துப் போனான்.

இறுதியில் தாய், தந்தை சொன்ன பெண்ணையே மணம் முடிக்கச் சம்மதித்தான். மணமேடையில்தான் மணப்பெண்ணைப் பார்த்தவன், அதிர்ந்து போனான். அத்தனை கொள்ளை அழகு தேவதை அவள்.

அன்று தனிமையில் இருக்கும்போது, மணமகளிடம் ஆர்வமாகக் கேட்டான், “என்னை எதற்கு மணம் செய்யச் சம்மதித்தாய்” என்றான். அதற்கு அவளோ, “அம்மா அப்பா எனக்கு நல்லதைத்தான் செய்வார்கள். அதனால் சம்மதித்துவிட்டேன்” என்றாள். அதற்கு அவன், “என்னை உனக்குப் பிடித்திருக்கிறதா” எனக் கேட்க அவள், வெட்கத்துடன் தலை குனிந்தாள். காதல் இனிமையானது; காதல் வாழ்க்கையே மேன்மையானது. 

     வாழ்வியல் தரிசனம் 27/11/2017

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X