2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

‘காலம் கடந்த மனச்சாட்சியால் பயனேதும் இல்லை’

Editorial   / 2017 ஜூன் 15 , மு.ப. 10:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

மனச்சாட்சியுடன் முரண்படும்போதுதான் பிரச்சினைகளே உருவாகின்றன. நல்லது, கெட்டது தெரியாத நபர்கள் சில முடிவுகளை எடுக்கும்போதுதான் மனச்சாட்சி உரக்கப் பேசுகின்றது. 

ஆனால், மனச்சாட்சியே இல்லாத மனிதர்களும் இருக்கின்றார்கள். சில நாடுகளில் தலைவர்களாக இருந்தவர்கள் மட்டுமல்ல, இன்னமும் நீதி நியாயம் பேசும் தலைவர்கள் பலருக்கு மனச்சாட்சி பொய்களை மட்டும் பிதற்றி நிற்கும். 

மனிதர்களை மயக்கும் விந்​தைகளை இவர்கள் அறிவார்கள். ஆனால், இது எக்காலமும் நிலைத்து நிற்பதுவுமில்லை. 

இன்று மதம், இனம், மொழி பேதம் பார்த்தே, நியாயங்களைவிட அநியாயங்களே மேலானதாக முன்வைப்பது ஒரு வீரமான செயல் என்று சொல்லிப் பெருமையும் கொள்வது கேலிக்குரியது; நீதியை அவமதிப்பதாகும். 

மனச்சாட்சி சில சமயங்களில் மௌனிக்கலாம். ஆனால் அது துணிச்சலுடன் வெளிப்பட்டால்தான் அதன் விஸ்தீரணம் புரியும். ஆனால், காலம் கடந்த மனச்சாட்சியால் பயனேதும் இல்லை.

வாழ்வியல் தரிசனம் 15/06/2017

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .