2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

‘காலம் போல், சிறந்த ஆசான் இல்லை’

Editorial   / 2018 மார்ச் 29 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

உங்களுக்கு பிடிக்காதவர்களில் அல்லது யாராவது உங்களில் பகைமை கொண்டவர்களின் நற்செயல்களை மனமாரப் பாராட்டுங்கள். அக்கணமே அவர்கள் உங்களின் மனவிலாசத்தைப் புரிந்துகொண்டு, அன்பு செலுத்துவார்கள். 

எவரும் எமக்கு எதிரிகள் இல்லை. எந்தத் தீயவர்களையும் மாற்றும், திருத்தும் திறனை உங்களுக்குள் வளர்த்துக் கொள்வீர்களாக. அது முடியாது விட்டால், அவர்களிடமிருந்து விலகி நிற்கலாம். ஆனால், தொடர்ந்தும் குரோதம் கொள்வதை நிறுத்துக. 

அவரவர் வினைப்பயன் அவர்களுக்கே கிட்டும். இதில் நாம் யார் தலையிட முடியும்.   

இறை தீர்ப்பின் தண்டனையில் விமர்சனம் எதற்கு? காலம் சொல்லும் ஆசான் போல், சிறந்த ஆசான் வேறு இல்லை.

 வாழ்வியல் தரிசனம் 28/03/2018

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X