2024 மே 20, திங்கட்கிழமை

‘கேவலமான அத்துமீறல்’

Editorial   / 2017 ஜூலை 05 , மு.ப. 10:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

கேள்வி கேட்கும் உரிமை யாவருக்கும் உண்டு என்கின்றோம். ஆனால், கேட்பதில் வரைமுறைகள் உண்டு. கண்ணியம் குறைவாக, எண்ணியபடி பேசக்கூடாது. இது முறையற்ற அநாகரிகமான உரிமைமீறல். 

தவறு இழைத்தவராகக் கருதப்படுபவரை பழைய கோபத்தை மனதில் வைத்து, ஒருவர் வைதல் கேவலமான அத்துமீறல்தான்.  

பொது இடங்களில் தங்களது சாமர்த்தியத்தைக் காட்டுவதற்கு, யாரையாவது வம்புக்கு இழுத்து, எப்பவோ நடந்து முடிந்த கதைகளைப் புதுப்பித்து, அவர்கள் மீது பழிசுமத்துவது இழிவான குணமல்லவா? 

வாய் பேசும் போது, தன்னிலை மறந்து, சொற்களை அழுக்காக வெளியேற்றுவது, கேட்பவர்களுக்கு கட்டாயம் கோபத்தை உருவாக்கும்.  

அன்போடு கூடிய அறிவு; பேச்சைக் குறைத்து, நிறைவை மேம்படுத்தும்.

 

   வாழ்வியல் தரிசனம் 05/07/2017

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X