2025 மே 12, திங்கட்கிழமை

‘கொழுத்த செல்வம் தேட முனைகின்றனர்’

Editorial   / 2018 ஜனவரி 04 , மு.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆசைகளைத் துறக்கும் மார்க்கத்தை நோக்கிப் பயணிப்பவர்களே ஆன்மீகவாதிகள்.

ஆனால், ஆசைகளை வளர்த்துக்கொண்டு போனால் ஆன்மீகத்தின் நோக்கம் என்ன? அதன் மேன்மையை உணராமல் போதனைகள் செய்வது வேடிக்கைதான்.

ஆன்மாவை வெறும் பொருட்கள்போல, பேசி மக்களைக் குழப்புவார்கள். உள்ளத்தை வெளுக்க வழி தேடாமல், கொழுத்த செல்வம் தேட முனைகின்றனர்.

ஆன்மீக மௌன நிலைக்குள் எம்மை, நாம் உணர்த்த வழிசமைக்கின்றது. தெளிவை உள்ளத்தில் முளைவிட, இதயமும் ஆன்மாவும் ஒரே வழியில் பயணித்துச் சங்கமிக்க வேண்டும்.

இது மனித உறவு சார்ந்ததல்ல; லௌகிய வாழ்வுக்கு அப்பாற்பட்டது.

இந்தத் திவ்விய நிலைக்கான தேடல், பற்பல பிறவிகள் கடந்த மிக நீண்ட பயணத்தின்பின் பெறும் பக்திப் பரவச ஏகாந்த நிலையுமாகும்.

இந்த அதிஉன்னத தேடலுக்கான கால நீட்சி ஆன்மாவை மெருகேற்றித் தூய்மையுடன் இறை அரசாட்சிக்குள் தன்னையும் இணைத்துக் கொள்கின்றது.

 

வாழ்வியல் தரிசனம் 04/01/2018

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X