2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

‘கௌரவத்தைக் காப்பாற்ற வேண்டும்’

Editorial   / 2018 ஜூன் 21 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

மிகச்சிறிய ஊர்ப் பிரச்சினைகளில் பிரபலங்கள் தேவையற்ற விதத்தில் மூக்கை நுளைத்தால், அவர்களுக்கு அவமானங்கள் தேடிவரும். மிகப்பெரிய விடயங்களில் வெற்றி கொள்ளுபவர்கள், தங்கள் கௌரவத்தைக் காப்பாற்ற வேண்டும். 

எல்லாமே தமக்குத் தெரியும் எனச் சில கல்விமான்கள், வீரர்கள் எனச் சொல்லப்பட்டவர்கள் தராதரம் தெரியாத, அறிவு குறைந்தவர்களிடம் கண்டபடி வாய்த்தர்க்கம் புரிவது, தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றாகும். 

ஒரு விடயத்தைப் பற்றிப் புரியாத பேர்வழிகளிடம், எந்த அறிவுபூர்வமான கருத்தும் எடுபடாது. படித்தவர்களைப் பிடிக்காத நபர்கள் அதிகமாக இருப்பது புதுமையல்ல. 

எவரும் நல்ல விடயங்களைப் பேசும்போது, சுற்றியிருப்பவர்களின் இயல்பையறிந்து  பேசினால் நல்லது. கேட்கப் பிடிக்காதவர்கள், துச்சமாக நோக்கினால் அதனால் வெட்கப்படவேண்டிய சூழ்நிலையும் உருவாகக் கூடும்.  யாருடனாவது கருத்துகளை விதைக்கும்போது, அவர்கள் பாணியில் உரையாடினால், அது சேர வேண்டிய இடத்துக்குப் போய்ச் சேரும்.

வாழ்வியல் தரிசனம் 21/06/2018

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .