2025 டிசெம்பர் 08, திங்கட்கிழமை

சார்ந்து வாழ்வதே உறவைப் பெருக்கும்

Princiya Dixci   / 2016 ஜூன் 10 , மு.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

பட்டாம் பூச்சி, பூக்களை முத்தமிடுவது, தனது வாழ்க்கைக்கான முயற்சிதான். இதுவும் சுயநலம் சார்ந்ததுதான். அவை பூக்கள் மேல் காதல் கொண்டு முத்தமிடுவதில்லை. அதனூடு, மதுவை மலர்களிடத்திலிருந்து உறிஞ்சி எடுக்கின்றது.

அதேபோல், பூக்கள் அழகாககத் தம்மைக்காட்டி, வண்டினத்தைக் கவர்வதும் தங்கள் நலன்சார்ந்ததுதான். பூவின் மகரந்தங்களைப் பரப்பி, தங்கள் இனத்தைப் பெருக்க வண்டுகளின் துணை தேவைப்படுகின்றது.

ஒன்றினையொன்று சார்ந்து தமக்கான தேவைகளைப் பகிர்வது இயற்கையான அற்புதங்கள்தான். ஆனால், மனிதர்களில் பலர், பிறரிடமிருந்து உறிஞ்சி எதையாவது கவர்ந்து எடுக்கவே பிரியப்படுகின்றனர். பரஸ்பரம் ஒருவரிடமிருந்து ஒருவர் பகிர்ந்து, நன்மைகளைப் பெற எத்தனை நபர்கள் தயாராக இருக்கின்றார்கள்.

மனிதன் தனித்து இயங்க முடியாது. சார்ந்து இயங்கி வாழ்வதே உறவைப்  பெருக்கும். வழங்குபவர்களுக்கே பெறுகின்ற தார்மிக உரிமையுண்டு. ஆனால், பரோபகாரி கைகளை நீட்டுவதுமில்லை.

வாழ்வியல் தரிசனம் 10/06/2016
-பருத்தியூர் பால.வயிரவநாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X