2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

‘சத்தியத்தின் வேர்கள் அறுபடுவதில்லை’

Editorial   / 2018 ஓகஸ்ட் 14 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

சமூப்புரட்சி வீரன் அவன். எவருக்கும் அவன் அஞ்சுவதில்லை. ஏழை, எளியவர் முன் தலைசாய்ப்பான். பொல்லாதவர்களை அன்பால் வெல்வான்.  

எத்தர்கள் அவனை அழிக்கப் பெருமுயற்சி செய்தனர். திடீரென அவன் முன் நின்றனர் இராணுவத்தினர். மிரட்டி, அடித்து, உதைத்து, உருட்டினர். 

“எதற்கு என்னுடன் மோதிப் பார்க்கிறீர்கள்; கௌரவமாக மக்களை நடத்திப் பாருங்கள்” என்றான். இராணுவத்தில் ஒருவன் வெகுண்டெழுந்து, “என்னடா பேசுகிறாய்” எனக் கேட்டு, பதில் வரும்முன் துப்பாக்கியால் சுட்டான். 

விழிகளில் அக்னி, புருவம் குறுகி விரிய சரிந்தவன், சுட்டவனைப் பார்த்தான். கரங்களைக் குவித்து அவனை வணங்கினான். அடுத்த நொடி, அவன் ஆவி புன்னகையுடன் கரைந்தது.  

துப்பாக்கியால் சுட்டவன், “உன்னையா சுட்டேன்” எனச் சித்தம் சிதற, தவித்தான்; வாடி வீழ்ந்தான். சத்தியத்தின் வேர்கள் அறுபடுவதில்லை; துளிர்க்கும்; உலகம் முழுவதும் படரும்.  

வாழ்வியல் தரிசனம் 14/08/2018

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .