2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

சந்தேகங்கள் இருக்கும் வரை...

Princiya Dixci   / 2016 மே 23 , மு.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

சந்தேகங்கள் இருக்கும் வரை அறிவுத் தேடல்கள் தொடரும். அறிவு இன்றேல் சந்தேகம் இல்லை. சந்தேகமில்லாது விடில் அறிவின் முதிர்ச்சியும் இல்லவேயில்லை.

இவற்றை மனிதன் தேடியபடி இருக்கும் ஆய்வுக்கு ஓய்வும் கிடையாது.

மனிதர் எதனையும் செய்யாமல் கண்டு கொள்ளாமல் இருந்தால், அது சடம் போன்ற உணர்வேயற்ற வாழ்க்கைதான்.

சடமாக வாழ்பவர்களுக்கு இன்ப, துன்ப நுகர்ச்சிகளும் இல்லை. இவர்கள் இயற்கை அழகை அதன் சூட்சுமத்தைப் புரியப் பிரியப்படப்போவதுமில்லை.

உலகின் இன்ப, துன்ப நுகர்வினில் புகுந்து கொள்ளாதவன் மனிதனேயல்லன், தன்னையும் உணர்ந்து, பிறர் நலனையும் கண்டு வாழ்பவனே உயிருள்ள ஒருவனுமாவான். ஆனால், உயிரோடு இருப்பவர்களில் சிலர் இயக்கமின்றி உறங்கிக் கொண்டிருக்கின்றார்கள்.

வாழ்வியல் தரிசனம் 23/05/2016
-பருத்தியூர் பால வயிரவ நாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .