2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

‘சமூக விசுவாசம் மாந்தருக்கு அவசியம்’

Editorial   / 2017 நவம்பர் 02 , மு.ப. 11:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

வீட்டில் பசு, ஆடு, நாய், பூனை, கோழி எனப் பலவற்றை மக்களில் பலர் வளர்க்கின்றார்கள். அவை எஜமானர்களுக்கு அன்புடனும் விசுவாசத்துடனும் இருக்கின்றன. 

கூப்பிட்டவுடன் நாய் ஓடிவந்து வாலை ஆட்டுகின்றது. பூனை வீட்டை விட்டு விலகுவதேயில்லை. பசு, ஆதாரமான கனிவுடன் எம்மை நோக்குகின்றது. கட்டுக்கடங்காத காளை தன்னை விழிகளால் நோக்கிய எஜமானனைப் பணிந்து நிற்கின்றது. 

 ஆனால், மனிதன் மட்டும் எவரது சொல்லையும் முழுமையாகக் கேட்பதுமில்லை; மதிப்பதுமில்லை. உணவளித்த தமது வீட்டாருக்குத் தனது ஆயுள் உள்ளவரை நன்றியுணர்வுடன் விலங்குகளும் பறவைகளும் இருக்கின்றன.  

சமூக விசுவாசம் மாந்தருக்கு அவசியம். எம்மை வளர்த்த பெற்றோரிடம் காட்டும் நன்றியறிதலை எங்களை மறைமுகமாக ஆதரிக்கும் மக்களிடம் காட்ட வேண்டும்.  

பணிவு, அன்பு, பரிவு ஆகியவற்றை நாம் ​ஐந்தறிவு உயிர்களிடம் இருந்து பெறுவோமாக. ஆணவம் அகற்றினால் வாழ்வு தழைக்கும்.  

     வாழ்வியல் தரிசனம் 02/11/2017

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X