2025 ஒக்டோபர் 21, செவ்வாய்க்கிழமை

‘சிருஷ்டிக்கு உருவம் வழங்குக’

Editorial   / 2018 பெப்ரவரி 28 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

கற்பனைகளைக் கண்டபடி உலாவரச் செய்யக்கூடாது.

நல்ல கற்பனைகளை வளர்ப்பதுதான் ஒருவரைச் சாதனையாளராக்கும்.

எதையுமே செய்யாமல், மற்றவர் செய்யும் காரியங்களை விமர்சனம் செய்துகொண்டு, கற்பனை உலகில் வாழ்வதால் ஏதுபயன்?

கற்பனை செய்து காரியமாற்றுபவன், சிருஷ்டிக்கு உருவம் வழங்குகின்றான்.

இந்த வளர்ச்சி குறையப்போவதில்லை.

மூளையுடன் மனம் இணையவேண்டும். மனம் வெறுத்தால் மூளை உறங்கிப்போகும்.

விருப்பத்துடன் மூளைக்கு வேலை கொடுக்கவும். இதனால், அடுக்கடுக்காகக் காரியங்கள், மிகத் திருப்பதிகரமாக ஈடேறும்.

நினைத்தல் கூட கற்பனையின் பிரசவம்தான். இதிலிருந்தே கண்டுபிடிப்புகள் பிறந்தன.

செயல்வீரர்கள் என்றும், பயின்ற வண்ணமே இருக்கின்றார்கள்.

இந்த இயக்கம், அவன் இறந்த பின்னரும், விழித்தபடி உலகுக்குப் பாடம் புகட்டியபடி இருக்கும்.

வாழ்வியல் தரிசனம் 28/02/2018

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .