Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 மே 30 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
துன்பத்தில்தான் அன்பைப் புரியமுடியும். ஒருவர் நன்றாக வாழும்போது, எல்லோரும் கூடி மகிழ்ந்து கொண்டாடுவார்கள். இந்தச் சலசலப்புகளைப் புத்தியுள்ளவன் நம்பமாட்டான். அவன் யதார்த்த வாழ்வை உணர்ந்தவன். எல்லாமே மாறும்; நல்லோர் அன்பு மட்டும் மாறவே மாறாது.
கெட்ட மனதை மனிதர் ஏன் மாற்றாமல் இருக்கின்றார்கள்? திருப்தி எனும் மனோ நிலைக்குள் தம்மை ஆட்படுத்தாது விட்டால் துன்பம்தான்.
இமயத்தைத் தங்கமாக மாற்றி, ஒருவருக்குத் தானம் வழங்கினாலும் பக்கத்து வீட்டு ஏழையின் காணியில், கண் வைப்பான். ஏன், அக்காணியில் உள்ள முருங்கை மரத்துக் காய்களையும் எடுப்பதற்கு எண்ணுவான். ஆசையை அடக்கினால் ஏது துன்பம்?
ஆசையின் உச்சம் மனிதனை வேஷக்காரன் ஆக்கிவிடுகின்றது.எதைப் பெறுவதற்கும் தனது உருவத்தை மாற்றி நடித்து, கொடிய பாவம் செய்யும் பிரகிருதியாகி, எதைக் காணப்போகின்றான்.
ஒருவன் சிறப்புடன் வாழ நிர்மலமான மனது வேண்டும். அது உங்கள் நெஞ்சத்துக்குள் உங்களை வரவேற்கக் காத்திருக்கிறது. அதற்குள் சங்கமித்து, சுந்தர மானிடர்களாக இன்பத்துடன் இயங்குக.
வாழ்வியல் தரிசனம் 30/05/2018
- பருத்தியூர் பால. வயிரவநாதன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .