2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

‘சுயநலத்தின் ஆட்சி எதையும் செய்ய வைக்கும்’

Editorial   / 2017 ஒக்டோபர் 13 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒருவரைத் தாக்கித் தாக்கிக் கொண்டே, உதவிகளை அவரிடமே கேட்பவர்கள் இருக்கிறார்கள். மறைமுகமாக ஒருவரை வைதுவிட்டு, நேரே அவரைக் கண்டபின்னர், சுவாமியிடம் வரம் கேட்பதைப்போல் இரந்து, நடிப்பது வெட்கப்படத்தக்கதே! 

சுயநலத்தின் ஆட்சி எதையும் செய்ய வைக்கும்.

ஆனால் சிலர், ஏன் பிறரை வெறுக்கின்றார்கள் என அவர்களுக்குப் புரியாதது அல்ல. அது பொறாமையின் வெளிப்பாடுதான். துஷ்டர்களுடன் சிநேகிப்பவர்களுக்கு, நல்லவர்களைக் கண்டால் பிடிப்பது இல்லை. தங்களுக்கு மட்டுமே சிருஷ்டிக்கப்பட்டது இந்த உலகம் என எண்ணி, மற்றவர்கள் பெறுவதைப் பிடுங்குவதே, வழக்கமாகக் கொண்டிருப்பவர்கள் இறை சாபத்தைப் பெறுவார்கள். இத்தகையவர்கள் நிரந்தரமாக ஜெயிப்பது கிடையாது.

நன்றி மறத்தல், நல்லோரைத் துறத்தல் என்​றைக்கும் தீமை தரும்.  

      வாழ்வியல் தரிசனம் 13/10/2017

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .