Editorial / 2017 ஒக்டோபர் 07 , மு.ப. 11:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
தங்களது ஒரே மகன், இலண்டனில் வௌ்ளைக்காரப் பெண்ணொருவரைத திருமணம் செய்த செய்தியை அறிந்து, பெற்றோர் அதிர்ந்தே போனார்கள்.
கொதித்தெழுந்த தந்தை, இவனுக்கும் எங்களுக்கும் எந்தவிதத் தொடர்புமே வேண்டாம் எனக் கர்ஜனை செய்தார். மகனும் எந்தத் தொடர்பையும் ஏற்படுத்தவே இல்லை. ஆனால் இலண்டனில் வசித்த உறவினர் சொன்ன செய்தி, மேலும் கவலையடைய வைத்தது. அவர் சொன்ன தகவல் இதுதான்.
உங்கள் மகன், தனது சுயநலத்துக்காக அந்த வௌ்ளைக்காரப் பெண்ணை ஏமாற்றிக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டான். உண்மையில் இங்கிலாந்து நாட்டில் விசா பெறவே இப்படிச் செய்தான். இவனுக்கு விசா கிடைத்ததும், அவளை விவாகரத்துச் செய்துவிட்டு, வேறு ஒருத்தியை மணம் செய்துவிடுவான்.
இந்தத் தகவலைக் கேட்ட பெற்றோர், அட, இவன் எங்கள் உறவுக்காறப் பெண்ணைத் திருமணம் செய்வதாக நிச்சயிக்கப்பட்டு விட்டது. இனி இன்னும் ஒரு பெண்ணை ஏமாற்றவா நினைக்கிறான் எனச் சொல்லித் திட்டினர். தாய்நாட்டைத் துறந்து, இப்படி ஒரு வாழ்க்கை தேவைதானா? சுயநலவாதிகளுக்கு நீதி.
வாழ்வியல் தரிசனம் 06/10/2017
- பருத்தியூர் பால. வயிரவநாதன்
2 hours ago
9 hours ago
07 Dec 2025
07 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
9 hours ago
07 Dec 2025
07 Dec 2025