2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

சுவீகாரப் புதல்வனை வரவேற்க…

Editorial   / 2018 ஜூன் 15 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸொப்பிங் பைக்குள் புத்தகங்கள் கொப்பிகளுடன், அரை மயக்க நிலையில், சின்னப் பையன் பாடசாலை சென்று கொண்டிருந்தான். அவனுடைய தோற்றம் வறுமையைப் பிரதிபலித்தது. பாடசாலையை அண்மித்ததும் அவன் மயங்கி விழுந்தான்.

மாணவர்களும் ஆசிரியர்களும் அவனருகில் குவிந்தனர். அவன் நிலை உணர்ந்த ஆசிரியர் ஒருவர், பக்கத்தில் நின்ற மாணவத் தலைவனிடம் காசைக் கொடுத்து, தேநீரும் பணிஸும் வாங்கிவர அனுப்பினார். 

அந்த ஏழை மாணவன் மயங்கி விழுவது முதல்முறையல்ல; அந்த மாணவனின் வாடிய தோற்றத்தைத் பார்த்தார் ஆசிரியர்; சிந்தித்தார். 

வறுமைக்குப் பசி நட்பு; வயிற்றில் உஷ்ணம். இவைதான் ஏழ்மையின் வடிவங்கள். உணர்ந்தவர் முடிவெடுத்தார். குழந்தையில்லாத தனது மனைவிக்குச் செய்தியொன்றைத் தெரிவித்தார். மாணவனும் தனது தாயுடன் தொடர்பு கொண்டான். 

அடுத்த நாள், அந்த ஏழை மாணவனைத் தனது தோளில் சுமந்தபடி, ஆசிரியர் தனது ஊருக்குச் சென்றார். சுவீகாரப் புதல்வனை வரவேற்க, ஆசிரியரின் மனைவி குதூகலத்துடன் காத்திருந்தாள்.

வாழ்வியல் தரிசனம் 15/06/2018

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .