2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

‘சூழும் துன்பங்கள் அவன் பரம்பரைக்கே கேடு’

Editorial   / 2017 ஓகஸ்ட் 21 , மு.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

பலரைக் காதலிப்பதும், பின்பு அவர்களைக் கைவிடுவதும், தங்களுக்கான உயர் தகுதி எனச் சிலர், வீம்புடன் சொல்வதுண்டு. வாழ்க்கையே ஒருகோலம். இதில், ஏது தவறுகள் எனச் சொல்வதில் ஆண், பெண் பேதமே கிடையாது.

இது நாகரீக உலகம். எவரும் எப்படியும் பழகலாம்; பிரிந்து விடலாம். இதில் மற்றையவர்கள் தலையிட ஏது உரிமை என்று விறைப்பாகச் சொல்பவர்கள், காலம் உருண்டோட, தேகம் சுருண்டு, இளைத்தபின் பழைய வினைகளால் வீழ்ந்து விடுவர்.

பாவம் புரிபவர்கள் அதன் பலனை அனுபவிக்கவும் தயாராக வேண்டும். கொடுக்கல் வாங்கல் என்பதே, செய்யும் வினைகளின் ஓட்டங்களால் நிகழ்வனவாகும்.

கற்பு எனும் சன்மார்க்கத்தையே கேலிக்குரியதாகக் கருதினால், சூழும் துன்பங்கள் அவன் பரம்பரைக்கே கேடு.

எங்கள் கலாசாரத்தின் மூலவேரே, நல்ல கணவன் மனைவி பிணைப்புத்தான். நல்ல குடும்பங்களே, உன்னத உலகைச் சமைக்கின்றன. இதில் உள்ள இன்பம், மாறும் போதையூட்டும் உறவுகளில் கிடையவே கிடையாது.

   வாழ்வியல் தரிசனம் 21/08/2017

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X