2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

தனிமையும் தேவைப்படுகிறது...

Princiya Dixci   / 2016 ஜூன் 27 , மு.ப. 03:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

உள்ளத்தோடு உரையாட தனிமை தேவைப்படுகிறது. எந்நேரமும் நாம், ஏதாவது கருமமாற்றுவதும் யாருடனாவது உரையாடுவதுமாக இருக்கிறோம்.

உங்களுடன் அமைதியாக உரையாட உங்கள் நெஞ்சம் ஏங்குகின்றது. ஆனால் நீங்களோ, சதா அலைந்தவண்ணம் ஓய்வேயின்றி, மனசை ஒரு நிலையில் நிற்கவிடாமல், உழன்றவண்ணம் சில சமயம் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்.

கடமைகளைச் செய்வதே அவசியமானது. செய்ய வேண்டியதைத் திட்டமிட்டுச் செய்தால், தேகம் அவதிப்படமாட்டாது.

உங்களை நீங்கள் கண்டு கொள்ளச் செய்யும் காரியங்களைப் புரிந்து கொள்ள, இதயத்துடன் உறவாடுங்கள். அதனை ஆசுவாசப்படுத்துக.

அமைதியாக மௌனமாகச் சிலமணித்தியாலங்கள் இடமளித்து, நெஞ்சத்தை ஈரமாக்கிக் குளுமையூட்டுக அன்பர்களே.

வாழ்வியல் தரிசனம் 27/06/2016
-பருத்தியூர் பால.வயிரவநாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .