2024 மார்ச் 28, வியாழக்கிழமை

‘தப்புகளை ஆராய முற்படக்கூடாது’

Editorial   / 2018 மே 17 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

நண்பர்களிடையே ஏற்படும் சின்னச்சின்னத் தப்புகளை ஆராய முற்படக்கூடாது. இவை சகஜமானவை. இதையே பெரிதுபடுத்தினால் நல்ல நண்பர்களுடனான நட்பு வெட்டப்பட்டுவிடும்; உணர்க. 

எல்லா நேரங்களிலும் எங்கள் விருப்பப்படி, எல்லோரும் நடந்து கொள்வார்களா? இது சாத்தியமற்றது. ஒரே மாதிரியாகவா மனிதர்கள் இயங்குகின்றார்கள்? இல்லையே. 

ஏன் நீங்கள் கூட என்றைக்கும் ஒரே மனநிலையில்தானா பிறருடன் இயங்குகின்றீர்கள்? நண்பர்களிடம் குறைகளைக் கண்டால் அன்புடன் சுட்டிக்காட்டுவதை விடுத்து, புறம்தள்ளி விலகக்கூடாது.இந்தப் பழக்கம் ஏற்பட்டால், நீங்கள் தனித்துத் தவிக்க நேரிடும். 

நல்ல நட்பு வட்டங்களை விரிவாக்கினால், எங்கள் பலம் பெருகும். நட்பால் ஒரு மனிதனுக்குள் பல மனிதர்கள் இணைந்து கொள்கின்றார்கள்.   

வாழ்வியல் தரிசனம் 17/05/2018

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X