Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 12, திங்கட்கிழமை
Editorial / 2018 மார்ச் 12 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
நகைச்சுவை என்கின்ற முறையில் திமிராகவும் ஒருவரைக் கிண்டலடிக்கவும் தங்கள் வார்த்தை ஜாலங்களைக் காட்ட, துடுக்காகவும் இடக்கு முடக்காகவும் பேசும்போது, இதற்குப் பதிலடியாக, தக்க பதிலிறுப்பதுண்டு.
விறகுவெட்டி ஒருவன் காட்டில் விறகு வெட்டக் கோடரியுடன் சென்றான். வழியில் விறகுவெட்டிக்குத் தெரிந்தவன், “எங்கு செல்கின்றாய்” எனக் கேட்டான். தான் எங்கு செல்கின்றேன் என்பது தெரிந்தும், அவன் இப்படிக் கேட்டதற்குத் தக்க பதிலளிக்க வேண்டுமென எண்ணிய விறகுவெட்டி, “மீன் பிடிக்கச் செல்கின்றேன்” என்றான்.
அதற்கு அவன், “வலை, தூண்டில் இல்லாமலா?” என்றான். விறகுவெட்டியோ, “கையாலேயே பிடிக்கலாமே” என்றான். “அப்படியாயின் எனது வீட்டுக்கும் கொஞ்ச மீன்களைக் கொண்டுவந்து போட்டுவிட்டுப்போ” என்றான். ஆத்திரமடைந்த விறகு வெட்டி, கோடரியை ஓங்கிக்கொண்டு சென்றான். கண்டபடி பேசினால் பகைமை உருவாகும். தர்க்கம், எல்லாச் சமயங்களிலும் எடுபடாது.
வாழ்வியல் தரிசனம் 12/03/2018
- பருத்தியூர் பால. வயிரவநாதன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 May 2025
11 May 2025
11 May 2025
11 May 2025