2025 டிசெம்பர் 05, வெள்ளிக்கிழமை

‘தர்மம் வீணாக அனுமதித்தலாகாது’

Editorial   / 2018 ஏப்ரல் 10 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரக்கப்படுதலென்பது, மானுடநெறி. இது, தர்மத்தின் ஓர் அங்கமுமாகின்றது. இத்தகைய இரக்க உணர்வுள்ளோரை ஏமாற்ற விளைவோர், பாவ ஆத்மாக்களாகின்றனர். 

பொய்யுரைத்து, நடித்து, வருவோரை நம்பவைத்து ஏமாற்றுவது, தற்போது சகஜமாகிவிட்டது. சில பேர்வழிகள், தங்கள் துயரக்கதைகளைச் சொல்லிச் சொல்லியே, பிறரிடம் பொருள் கோருகின்றனர்.

ஆனால், அவர்கள் சொல்வதில் பெரும்பாலானவை, கற்பனை கலந்த நெடும்தொடர் என்பதை, இரக்கம் மிகுந்தவர்கள் கவனத்திற்கொள்வதுமில்லை.

துன்பப்பட்டவர்களைத் தாங்குதல், மேலான கைங்கரியமாகும். ஆனால், தர்மம் - சேரும் இடத்தில் சேர வேண்டும். பற்பல காரணங்களைக் காட்டிப் பணம் சேகரிக்கும் கூட்டம் அதிகரித்துவிட்டது.

இணையத்தளங்களிலும் இந்த சூது நடக்கின்றது. கொடுக்கும் முன்னர், இதைப் பெறுவதற்கு வருபவர் யாரெனத் தெளிந்துகொள்வது நல்லது. எக்காரணம் கொண்டும், தர்மம் வீணாக அனுமதித்தலாகாது.

ஏதிலிகளுக்காக இரங்குபவர்கள், இயன்றளவு வழங்குங்கள்.  

வாழ்வியல் தரிசனம் 10/04/2018

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X