2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

தாங்கிக் கொள்ள மனம் இருந்தால்…

Editorial   / 2018 ஏப்ரல் 30 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

எங்களுக்கு யாராவது தேவையற்ற விதத்தில் அளவுக்கு மீறி, இல்லாதவை பொல்லாதவைகளைச் சொன்னால், நாங்கள் அவர்களிடத்தில் எச்சரிக்கை செய்ய வேண்டும். காரியம்பெறச் சிலர் தேவையின்றி, பொய்யான புகழ் உரைகளைப் பொழிவார்கள். நல்ல நோக்கத்துக்காக இன்றிச் சுயநலம் மேலிட சிலர் எதுவுமே செய்யலாம். 

ஆனால், வெளிப்படையாகவே உதவி கோருவதில் தவறு ஒன்றும் கிடையாது. தகைமைகள் உள்ளவர்கள் முகஸ்துதிக்கோ அல்லது காரணமின்றிப் புகழப்படுவதையோ விரும்பமாட்டார்கள். 

யாராவது கூச்ச மிகுதியால், வார்த்தைகள் வெளியே வராமல்த் திணறினால், நீங்களே வலிந்து கேட்டுத் தேவையானவற்றை இயன்றளவு செய்து கொடுத்தல் சிறப்பாகும். 

பலகரங்களால் தூக்கி நிறுத்தப்படுவதே, இந்த உலகம். இந்தக் கரங்களுடன் உங்கள் கரங்களும் இணைந்து கொள்ளட்டும். 

இப்படி இணைவதற்குச் சந்தர்ப்பம் கிடைப்பதுகூட, எமக்குப் பெருமைதான். தாங்கிக் கொள்ள மனம் இருந்தால் மலையும் சிறுதுரும்புதான்.

வாழ்வியல் தரிசனம் 30/04/2018

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X