2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

‘திடசங்கற்பம் கொள்வதே அழகு’

Editorial   / 2017 செப்டெம்பர் 11 , மு.ப. 10:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒருவரைக் கிண்டலடித்து ஓரம் கட்டியவர்கள், அவன் மேன்மையானதும் சற்றும் கூசாமல் அவன் காலடியில் விழுவது ஒன்றும் புதுமையல்ல. சுயநலத்தில் கட்டிஎழுப்பப்பட்ட உலகமாக இன்று மாறிவிட்டது. எந்த அரச பதவியில் அமர்ந்தாலும் அதில் ஒட்டிக்கொள்ளும் அரசியல்வாதிகள், ‘எப்போது ஐயா கூச்சப்பட்டார்கள் சொல்லுங்கள்’.  

ஆனால், மானம், மரியாதை, சுயகௌரவம் உள்ள ஏழைகளின் மனவலிமை, கூடுவிட்டுக்கூடு பாயும் காசுக்காரர் பலரிடம் இந்தக் குணாம்சம் கிடையவே கிடையாது. 

நியாயபூர்வமாகக் கிடைப்பதைவிட, வேறு எந்த மாயத் திரவியங்களும் எமக்குத் தேவையற்றது எனத் திடசங்கற்பம் கொள்வதே அழகு.  

நற்குணம் காசு ஈட்டித்தர மாட்டாது என்று சொல்பவர்களுக்குத் தங்கள் ஆத்மா வலுக்குன்றுவதை உணர்வதேயில்லை. மேலதிக தேவைகளைவிட, உள்ளத்தை மேவிப்பூட்டுதலே மேன்மையானது. 

     வாழ்வியல் தரிசனம் 11/09/2017

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .