2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

‘துணிச்சலே இனிது; அதுவே சிறப்பு’

Editorial   / 2018 ஏப்ரல் 12 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

பயத்துடன் மனம் இசைந்து உறவுகொள்வதைப் போல, இம்சை வேறில்லை. இதனுடன் ஜீவிப்பவர்கள் இதன் சொற்படியே இயங்குகின்றனர். போராடத் திராணியற்ற நிலையை அச்சம் உருவாக்கி விடுகின்றது. 

எனவே, அச்சம் மாந்தர்களுக்கு எதிரி; உறவு அல்ல. எனினும் அறிவு பூர்வமாக உணர்ந்தவன், இதை எப்படிக் கையாள்வது என்பதை அறிந்து கொள்கிறான். 

துணிச்சல் மிகுந்தவன் எனும் இறுமாப்புடன் எதையும் செய்துவிட முடியாது. எதையும் சிந்தித்துச் செய்வது அச்சத்தினால் அல்ல; முன்யோசனையால்த்தான் என்பதை அறிக. 

எச்சரிக்கையுடன் இருப்பது என்பதற்காக, பெறுமதியற்ற சின்னக் காரியத்துக்கும் பதட்டத்துடன் நடப்பது, கேலிக்குரிய காரியம் அல்லவா? 

சின்னக் குழந்தைகள் எந்தவிதமான பதற்றமும் இன்றி, நடைபயில்கின்றன. 

ஆனால், சதா மனத்தைக் கலைத்து வாழ்வது, தன்னையே தான் இழப்பது போலாகும். துணிச்சலே இனிது; அதுவே சிறப்பு.

வாழ்வியல் தரிசனம் 12/04/2018

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X