2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

‘தேற்றுதல் பண்பு, ஆறுதலை ஏற்படுத்த வல்லது’

Editorial   / 2018 மே 21 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

மரணத்தை எவருக்குத் தான் பிடிக்கும்? தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு, இறக்கும் தறுவாயில், தனது தவறை உணராமல் இருக்க முடியாது.  

ஒருவரது இறப்பால் உலகம் உறங்கிப் போகாது.

தான் இறந்தால், தன்னைச் சுற்றி இருப்பவர்கள், சதா ​சோகத்தில் இருக்கட்டும் எனும், வன்மம் நிறைந்த கீழ்த்தரமான போக்கே, தற்கொலை முயற்சிக்கான காரணங்களில் ஒன்றாக இருக்கலாம்.  

ஆனால், தீராத நோயின் அவஸ்தை தாங்க முடியாமல், சோக நிகழ்வுகள், வாழ வழியில்லாத ஏழ்மை நிலைகள் எல்லாமே, இந்த உலகுக்கான வடுவாகும் வண்ணம், இந்த உலகை விட்டுப் பிரியச் சிலர் விரும்பித் தற்கொலையை ஏற்படுத்திக்கொள்கின்றனர்.  

எங்களில் பலர், சோகத்தில் உள்ளவர்களைக் கண்டும் காணாமல் இருக்கின்றார்கள்.

தேற்றுதல் பண்பு, மற்றவர்களுக்கு ஆறுதலை ஏற்படுத்த வல்லது. பொருள், பண்டம் கொடுக்க இயலாதவிடத்து, அன்புடன் நல்ல வார்த்தை​களைச் சொன்னால் என்ன?  

எவர் மனத்தையும் உறுத்துவது போல பேசுதல் ஆகாது.

அநேகமான துர்மரணங்கள், மனதை நோகடிக்கும் வார்த்தைகளாலேயே ஏற்படுகின்றன. அன்பான குடும்ப உறுப்பினர்களை நிந்திப்பதைத் தவிர்க்க, பாசத்துடன் பழகினால், பல பிரச்சினைகள் கருவிலேயே எரிந்துவிடும்.

வாழ்வியல் தரிசனம் 21/05/2018

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .