2024 மே 20, திங்கட்கிழமை

‘தேவையற்றவைகளைக் களைவது நல்லது’

Editorial   / 2017 ஜூலை 11 , மு.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏதாவது பொருட்கள் எனது முயற்சியால் கிடைத்தாலும் இதனால்தான் என் ஆத்மாவுக்கு என்ன பயன் கிடைத்துவிடப் போகின்றது? என உள்மனதூடாக எனது ஆன்மா கேட்பது போல் இருக்கின்றது.

அன்பர்களே!  நாம் சேமிக்கும் சடப்பொருட்களை ஆன்மா எடுத்துக்கொள்வதுமில்லை. எதையும் விட்டுவிடத் தயாராக உள்ளவனுக்கு பயமும் இல்லை; பதட்டமும் இல்லை. மாறாகத்  தெளிவுடன் அவன் இயங்குகின்றான்.

நாங்கள் உள்மனது உள்ளதைச் சொன்னாலும் எதையும் விடுவதாக இல்லை. ஆனால் படிப்படியாக தேவையற்றவைகளைக் களைவது நல்லது. அது பொருளாக இருக்கட்டும்; மூளைக்குச் செலுத்தி பாதுகாக்கின்ற தேவையற்ற எண்ணங்களையும் கழற்றி விடுவதானது, ஆன்மபலத்தை வலுவேற்றும்.

விட்டுவிடுதலால் ஆசைமிகு தேவைகள் துறக்கப்படுகின்றன.

   வாழ்வியல் தரிசனம் 11/07/2017

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X