2025 ஓகஸ்ட் 29, வெள்ளிக்கிழமை

நிதானமான பேச்சு பயபக்தியைத் தரும்

Princiya Dixci   / 2016 ஜூலை 07 , மு.ப. 03:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

நேர்மையுடனும் சத்திய வாழ்வுடனும் வாழும் மேன்மக்கள் வாயால் உதிர்க்கும் வார்த்தைகள் தீட்சண்யமாக இருக்கும். இத்தகையவர்களின் வார்த்தைகள் மாறுபாடு இன்றி நிதானமாக இருப்பதால் கேட்பவர்கள் பயபக்தியுடன் ஏற்றுக் கொள்கின்றார்கள்.

மேலும், தீர்க்கதரிசனத்துடன் உரைப்பதால் மக்களும் அதனை மிகவும் நம்பிக்கையுடன் செவிமடுக்கின்றனர். இது வெறும் பொழுதுபோக்கிற்கானதல்ல; எழுச்சியூட்டலுக்கானதே‚

நாவன்மையுடன் துணிச்சல் மேலோங்கியிருக்கும் இத்தகையவர்களுடன் மோதி எவருமே இலகுவில் வெற்றி பெற்றுவிட முடியாது.

நல்ல விஷயங்களை, உள்ளதை உள்ளபடி, சொல்ல வேண்டிய முறையில் பக்குவமாகச் சொன்னால் இதனை விட மக்கள் சேவை வேறு ஏது?

சேவை மனப்பான்மையுடனும் பொறுப்புடனும் உரையாற்றியவர்களில் பலர் தேசத்தலைவர்களாகி இருக்கின்றார்கள். ஆன்ம சுத்தியே நல்ல சிந்தனைகளையும் உரைகளையும் உருவாக்கும்.

வாழ்வியல் தரிசனம் 07/07/2016
-பருத்தியூர் பால.வயிரவநாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .