2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

நலிந்த நீதி நிமிர்வது எப்போது?

Princiya Dixci   / 2016 செப்டெம்பர் 12 , மு.ப. 03:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிறைச்சாலை உலகம் அவனைச் சுவீகாரம் எடுத்து ஏழு வருடங்களாகி விட்டன. இருட்டு வாழ்க்கையை கருகிய மனத்துடன் வாழ்ந்து இளமையைத் தொலைத்துக் கழித்தான்.

செய்யாத கொலைப் பழியை, அதனைச் செய்த கூட்டமே பண பலத்தால் காவல் துறையை கைக்குள் போட்டு, சிறைக்குள் அவனைத் தள்ளியிருந்தது. ஆயினும், நீதிமன்றம் சற்றே இளகிய மனதுடன் விடுதலை செய்திருந்தது.

'ஹா.. விடுதலை வாழ்க்கை இதுதானா? சுதந்திரப் பறவையாக சிறகடித்து, இனிப்பறப்பேன்; என்னை வீண்பழிக்கு ஆளாக்கியவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்துவேன். அச்சப்பட்டால் நீதி கிட்டாது' எனச் சொல்லி, வெளி உலக ஒளியை நெஞ்சத்தால் முத்தமிட்டான்.

வெளியே வந்து ஓரிரு மணித்துளிகள் தான், பட்..பட்...பட்டென ஓசையுடன் குண்டுகள் அவன் மார்பைத் துவம்சம் செய்தன.

அவனுள் உலாவிய உயிர், சுதந்திரமாக மீண்டு, விட்டேகியது. துஷ்டர்கள் இவன் ஆவிக்கு ஆப்பு வைத்தனர். 'இப்போது நான் காற்றோடு காற்றாக விண்ணில் களிப்புடன் பறக்கின்றேன்; உறக்கத்துடன் விழிகள் கவிழ்ந்தன'. நலிந்த நீதி நிமிர்வது எப்போது? இழந்ததை மீட்க ஒருவராலும் முடியாது.

வாழ்வியல் தரிசனம் 12/09/2016
-பருத்தியூர் பால.வயிரவநாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .