2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

நல்ல காதலைப் புரிந்து கொள்க!

Princiya Dixci   / 2016 ஜூலை 26 , மு.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

காதலர் வாழ்க்கையில் என்னென்னவோ நடக்கும். இதனை எல்லாம் பெரிதுபடுத்தினால் காதல் வெற்றி பெறாது என்று காதலர்களுக்கு உபதேசம் செய்யப்படுவது வழக்கம்.

தன்னை ஏறெடுத்தும் பார்க்காத பெண்ணை ஓர் இளைஞன் தொடர்ந்தும் பின் தொடர்ந்த வண்ணமே இருந்தான். அவளுக்கோ பொறுக்கமுடியவில்லை. ஒரு நாள் பலர் முன்னிலையில் அவன் முகத்தில் காறி உமிழ்ந்து விட்டாள். அவனுக்கோ பெருத்த அவமானமாகிப் போய்விட்டது.

சம்பவம் நடந்து ஓரிரு வருடங்களின் பின், அவர்களை ஒன்றாக கைக்குழந்தையுடன் பார்த்தேன். திகைப்பாக இருந்தது. 'எப்போது திருமணமாயிற்று'? என்று கேட்டேன். அந்தப் பெண் பதிலிறுத்தாள்.

'எனக்கு இப்படி ஒரு நல்ல கணவன் கிடைக்க நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். நான் அவருக்குச் செய்த அவமானங்களையும் பொருட்படுத்தாது என்னையே நேசித்தார். நான் இவரை மனமார ஏற்றுக் கொண்டேன். என்னைக் கண்போல காப்பாற்றுகின்றார்' என்றார். நல்ல காதலைப் புரிந்து கொள்க!

வாழ்வியல் தரிசனம் 26/07/2016
-பருத்தியூர் பால.வயிரவநாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .