2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

நல்ல சொற்களால் பிறர் மனங்களை அள்ள முடியும்

Princiya Dixci   / 2016 ஓகஸ்ட் 01 , மு.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

நல்ல பேச்சை ஒருவர் பேசும் போது நாமும் அவர்களுடன் பயணம் செய்வது போலிருக்கும்.

மேடையில் அறிவுபூர்வமான உரைகளை இலகுநடையில் பேச்சாளர் பேசும்போது மனம் ஒருநிலைப்படுகின்றது. சொல் வன்மை சாதாரண விடயமல்ல.

நன்றாகப் படித்த எல்லோருமே மேடையில் சிறந்த உரையாளர்களாக இருக்க முடியாது. கருத்துக்களைக் கோர்த்துச் சொல்லுதல் பட்டறிவு, கல்வி, வாசிப்புப் பழக்கம், உலக யதார்த்தங்களை உணரும் திறன், பேசும் மொழியின் உச்சரிப்புகள், அவையறிந்து பேசுதல் முதலியவற்றை தெளிவுடன் உணர்ந்து பேச்சாளர்கள் பேச முனைந்தால் சிறந்த நாவன்மையாளர்களாக முடியும்.

கல்வி, கேள்வி என்பதில் கேள்வி என்பது கேட்டறிதல் என்பதுவாம். எனவே, சிறப்பான உரைகளைக் கேட்பதுவும் எமக்குக் கிடைக்கும் கொடைதான்.

சுவாரஸ்யமாக மக்கள் முன் உரையாட வேண்டும். அவை எமக்கு நல்லறிவை ஈட்டித்தருதல் அவசியம். நல்ல சொற்களால் பிறர் மனங்களை அள்ள முடியும்.

வாழ்வியல் தரிசனம் 01/08/2016
-பருத்தியூர் பால.வயிரவநாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .