Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 ஜூன் 07 , மு.ப. 03:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதிதாக ஒருவரைச் சந்தித்து அவருடன் நட்புப்பூண்டுவிட்டால், பழைய நல்ல நண்பர்களைக் கழற்றிவிடுபவர்கள் பலர் உள்ளனர்.
நல்ல நட்புக்கு, புதியது பழையது என்ற பேதம் காட்டலாகாது. ஆனால், பழைய நண்பர்கள், எங்களை நன்கு புரிந்திருப்பார்கள். அவர்களைத் திடீரெனக் கண்டும் காணாமலும் போவது முறையல்ல.
புதிதான தோழன் நல்லவனாக இருந்தாலும், முன்னர் தங்களுடன் கொண்ட நல்ல நட்புக்கு என்ன அர்த்தமுண்டு? இதுகூட சுயநலம், அல்லது உள்நோக்கமுடைய செயல் எனக்கருத இடமுண்டு.
காரண, காரியத்துடன் மட்டுமே புதிய உறவுகளைத் தேடுவது அநாகரிகமானது. மேலும், சின்ன வயதுத் தோழர்களைக் கூட முழுமையாக மறந்து விட்ட நபர்கள், இறுதிக் காலத்தில், அதனால் ஏற்பட்ட வலியை உணர்ந்தே தீருவர்.
புதிய சந்திப்பினால், அல்லது பழைய நட்பினால் உருவான இறுக்கத்தைத் தளர்த்த விடவேண்டாம்.
வாழ்வியல் தரிசனம் 07/06/2016
-பருத்தியூர் பால.வயிரவநாதன்
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago