2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

‘நல்ல தமிழ் பேசுக’

Editorial   / 2018 மே 11 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

சில விடயங்களில், எங்கள் அபிப்பிராயங்களைப் பேசாமல் வாழமுடியாதிருப்பது மேலானது. இருக்கும் இடம் அறிந்து, விடயத்தை நன்குப் புரிந்து, சுற்றியிருக்கும் நபர்களின் குணமறிந்து, பேசலாமா அல்லது விடலாமா எனச் சிந்தியுங்கள்.

கௌரவம் என்பதே என்னவென்றுத் தெரியாத கூட்டத்தில், மாட்டிக்கொண்டு அவஸ்தைப்படுவதை விட, சும்மா இருப்பது நல்லது.

இது, கோழைத்தனமானது அல்ல. நல்லோர், வல்ல புலமையாளரின் முன் பேசுதல், எமக்கான அங்கிகாரத்தை அளிக்கும்.

உட்பூசலுடன் இயங்குபவர்கள், பொறாமைக்காரர்கள், நல்ல விடயங்களைக் காதில் போடவே மாட்டார்கள். சபை நடுவே பேசுமுன், உங்களை நீங்களே நிதானப்படுத்திக்கொள்ளுங்கள். 

சில சமயங்களில், பேச்சாளர்கள் சிறந்த முறையில் பேசும்போது கூச்சலிடுவதுமுண்டு. இதன் பொருட்டுக் கோபப்பட்டுக் கொள்ளாது, அமைதியுடன் இயங்கினால், சபை உங்களை ஏற்றுக்கொள்ளும்.

நல்ல விடயங்களைப் பேசும்போது, மென்மையாக, அமைதியுடன் உரையாற்றினால், பேச்சுகள் ஏற்றுக்கொள்ளப்படும்.

நல்ல தமிழ் பேசுக!

வாழ்வியல் தரிசனம் 11/05/2018

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .