2025 ஒக்டோபர் 21, செவ்வாய்க்கிழமை

‘நல்லதை நிராகரிக்க வேண்டாம்’

Editorial   / 2018 மார்ச் 08 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

மனம் ஒரு ஜடமான உற்பத்தி வஸ்து அல்ல; இது உணர்வு சார்ந்த அற்புதக் கருவி. இது தரமான தகவல்களையும் சொல்லும். மதியை மயக்கும் விடயங்களையும் ஒளிந்திருந்து வெளிப்படுத்தும்.

எனினும், இதன் ஆதிக்கத்துக்குள் அசராத மாந்தர்களே இல்லை. இது தெளிவு ஊட்டுகின்றதா, அல்லது நெஞ்சத்தைத் தடவித் தாலாட்டுகின்றதா? அல்லது இரண்டும் கெட்டான் நிலைக்குத் தள்ளிவிடுகின்றதா எனப் பலர் தவிப்பதும் உண்டு.

நெஞ்சத்தில் தூய்மையை ஏற்றினால், மனதுக்குள் மகா வல்லமையை நீங்கள் உணர்வீர்கள்.

உனது எண்ணங்கள் சரியில்லை. மனதை விஷம் போல் வைத்திருக்கின்றாய் எனச் சிலர் தனக்குப் பிடிக்காதவர்களைச் சொல்வதுண்டு.

சாதாரண தவறு புரிபவர்கள் கூட, மேற்சொன்ன வார்த்தைகளைக் கொட்டுவது நகைப்புக்குரியதே.

கண்ணுக்கும் அறிவுக்கும் புலனாகாத நெஞ்சத்து வெளிப்பாடுகள், நல்லதைச் சொன்னால் நிராகரிக்க வேண்டாம்.   

வாழ்வியல் தரிசனம் 08/03/2018

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .