Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 ஒக்டோபர் 26 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரபஞ்சம் மிகப்பெரியது; வலியது. ஆனால், அது ஆன்மாவுடன் நெருங்கிய தொடர்புபட்டது.
எமது சிந்தனைகள், நேரிய வழியில் முரண்பாடுகள் இன்றி அமைந்தால், இந்தப் பிரபஞ்சமும் எமக்கு இயைபாக ஒன்றித்து, எங்கள் எண்ணங்களுக்கு வலுவூட்டும்.
வெறும் காற்றையும் சூரிய ஒளியையும் மட்டும் உட்கொண்டு, காட்டில் வாசம் செய்யும் சித்தர்களை ஆதரிப்பவர் யார்?
பஞ்சபூதங்களான நீர், நெருப்பு, வாயு, ஆகாயம், நிலம் எல்லாமே இவர்களைப் போஷிக்கின்றன. இவர்கள் உணவைத்தேடி அலைவதுமில்லை. ஆனால், இப்படி எல்லாம் எம்மால் வாழமுடியாது.
எமது எண்ணங்களைத் தூய்மையுடன் வைத்திருந்தால், இந்த உலகமும் பிரபஞ்சமும் அதை ஏற்று, எங்களை மிக வலிமை படைத்த மாமனிதர்களாக்கும். இந்தப் பிரபஞ்சத்தக்கு பூச்சியும் ஒன்று மனிதனும் ஒன்றுதான். இந்த உண்மையை உணர்க! நல்லதை மட்டும் நெஞ்சத்தில் உட்புகுத்துக. அதுபோதும்.
வாழ்வியல் தரிசனம் 26/10/2017
- பருத்தியூர் பால. வயிரவநாதன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .