2025 மே 12, திங்கட்கிழமை

நீடித்த சந்தோசம்

Editorial   / 2018 ஜனவரி 02 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

சந்தோசத்தை அடைவதற்கான வழிகளில், தங்களுக்கு மட்டும் அனுகூலமான வழியை மட்டும் கருத்தில் கொள்ளாமல், எல்லோருக்குமான நல்ல காரியங்களை முடிந்தவரை செய்ய முற்படுவதே நீடித்த சந்தோசமாகும்.  

உங்களைப் பிறர் கௌரவப்படுத்தும் போது, அதை மன மகிழ்வுடன் ஏற்றுக்கொள்ளும் நீங்கள், எத்தனை நபர்களை அன்புடன் கௌரவப்படுத்திய வண்ணம் இருக்கின்றீர்கள். அல்லது ஏதாவது குறிப்பிட்ட உதவிகளைத் தன்னலமற்ற நிலையில் செய்துள்ளீர்களா என உங்களை நீங்களே கேட்பீர்களாக.

நன்றிமறப்பது மனச்சாட்சியை நெஞ்சத்தின் பதிவிலிருந்து அறுப்பதுபோலாகும். பிறர் செய்யும் நற்காரியங்களின் திறமைகளைக் கண்டுகொள்ளாதவர்கள் சமூகத்திலிருந்து    பயன் பெறவேண்டும் என எண்ணுவது வெட்கப்பட வேண்டியதாகும். 

தங்களது காரியங்கள் இனிதே நிறைவேற்றப்பட்ட​துமே அந்தப் பணிக்காக உதவி நல்கியவர்களை நினைவு கூருவதற்கு பலர் மறந்தும் போகின்றார்கள். உடன் செய்ய வேண்டிய நல்ல கருமங்களை, குறிப்பு எடுத்து உடன் நிறைவேற்றுக. மாந்தரை மதிப்பதுவே மானிடரின் பெரும் கடன்.

வாழ்வியல் தரிசனம் 02/01/2018

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X