2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

போலியான பாராட்டுக்கள் தேவை இல்லை

Princiya Dixci   / 2016 செப்டெம்பர் 14 , மு.ப. 03:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

தற்புகழ்ச்சி செய்யாமல் தனது கருமங்களைச் சீராகச் செய்தால்இ அவர்களது தன்னடக்கத்தைக் கண்டு எல்லோருமே மெச்சுவார்கள்.   

தன்னடக்கம் உள்ளவர்களுக்கு ஆன்மபலம் அதிகரிக்கின்றது. மேலும் இத்தகையவர்கள்இ ஏனையவர்களை ஏளனம் செய்வதில்லை.   

உயர் நிலையில் வாழ்ந்து வரும் சான்றோர்கள்இ அனைவரையும் அரவணைப்பதுடன் எளிய வாழ்க்கையையே விரும்பி ஏற்பார்கள்.  

இன்று டாம்பீக வாழ்வில் மோகம் கொள்பவர்கள்இ அதுவே தமக்கான கௌரவம் என்று எண்ணுகின்றார்கள். இதனால்இ ஒருவித மமதையையும் தமக்குள் ஏற்படுத்தி விடுகின்றார்கள்.  

எங்களது வாழ்வை மேம்படுத்த ஏனையவர்களின் முகஸ்துதிகளும் போலியான பாராட்டுதல்களும் தேவையே இல்லை.   

வாழ்வியல் தரிசனம் 14/09/2016
-பருத்தியூர் பால.வயிரவநாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .