2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

பண்பாடு உள்ள மனிதர்களுடன் பழகும்போது…

Editorial   / 2017 ஓகஸ்ட் 23 , மு.ப. 09:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

பண்பாடு உள்ள மனிதர்களுடன் பழகும்போதுதான், எங்களுடைய பலவீனங்களும் தவறுகளும் புரிய ஆரம்பிக்கின்றன. 

எல்லாமே தெரிந்தும்கூட, எதுவுமே தெரியாத மாதிரியும் தற்புகழ்ச்சி, மமதையின்றி சகலருடனும் சரிசமனாக, வேற்றுமை பாராது பழகும் தன்மை எல்லோருக்கும் முடியுமான காரியமே அல்ல! இதற்கு நல்ல மனப்பக்குவம் இயல்பாக உருவாக வேண்டும். 

என்னுடன் பழகிய பலர், மாமனிதர்களாகத் தெரிந்தார்கள். நான் இளைஞனாக இருந்த காலத்தில், ஒரு சமயம், தெருவில் நடந்துகொண்டிருந்த போது, என்னைத் தெரிந்திருந்த நீதிபதி ஒருவர், தமது மோட்டார் வாகனத்தை நிறுத்தி, “வாரும்..வாரும்” என அழைத்து, தனது வாகனத்தில் ஏற்றி, உரிய இடத்தில் சேர்த்தார். அந்த உயரிய பதவியில் இருந்தவர், என்னுடன் மிகவும் சகஜமாகப் பேசுவார். இப்படி எல்லோராலும் முடியாது அல்லவா? 

எக்கணமும் நீ மிக எளிய, சாதாரணமானவன் என, மனது சொல்லிக்கொண்டிருப்பதற்கு நல்லோர் தொடர்பே காரணம்.  

   வாழ்வியல் தரிசனம் 23/08/2017

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X