2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

‘பாசம் பொதுவானது’

Editorial   / 2017 ஒக்டோபர் 31 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிள்ளைகளிடம் ஈடிணையில்லாப் பாசம் காட்டும் தாயின் தாயன்புக்கு நிகரானதே, பிள்ளைகள் மீதான தந்தையின் பாசமும். எந்த ஓர் ஆணும், எல்லாப் பி​ள்ளைகளையும் அன்பு மீதூர அரவணைக்கும்போது, அந்த ஆணும் தாய் போலாகின்றான்.  

தற்காலத்தில், ஆண்களில் பலரும் குழந்தைப் பராமரிப்பில் மேலான பாசத்தை ஊட்டியே வளர்க்கின்றனர். 

பாசம் பொதுவானது; இன்று பிள்ளைகளை வளர்க்கும் விடயத்தில் ஆண்களின் பங்களிப்பு மேலதிகமாகத் தேவைப்படுகின்றது. இணைந்து வாழும் கூட்டுக் குடும்ப முறைமை இயலாதுள்ளது. சமூக அமைப்பே மாறிவிட்டது.  

எனவே கணவன், மனைவி இணைந்தே பிள்ளைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இதனால் ஆண்பாலாரின் பாசவலு அதிகரிக்கின்றது. கணவன், மனைவி உறவும் இறுக்கமடைகின்றது. 

     வாழ்வியல் தரிசனம் 31/10/2017

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X