2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

‘பாவிகளின் அட்டகாசம் கூடி விட்டது’

Editorial   / 2017 ஜூன் 26 , மு.ப. 09:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒரு பாவமும் செய்யாதவர்கள் கூட, பயத்துடன் வாழ்கின்றார்கள். பயத்தை ஒழித்தால் துணிச்சல் வரும் என்கின்றோம்.  

மேலும், நேர்மையுடன் வாழ்பவர்களுக்கு பயம் வரவே வராது என்பர். அப்படியாயின் பயஉணர்வு ஏன் நல்லவர்களுக்கும் வருகின்றது? 

இன்று பாவிகளின் அட்டகாசம் கூடி விட்டது. அரசாங்கங்களும் இவர்களைத் துணிச்சலுடன் அடக்குவது இல்லை. இந்தப் பாவம் செய்யும் துஷ்டர்களுக்குச் செல்வாக்கும் அதிகம். 

‘எமக்கு எதற்குப் பொல்லாப்பு’ என ஒதுங்கும் கூட்டம் அதிகமாகி விட்டது. அடாவடித்தனம் செய்பவர்களை ரௌத்திரத்துடன் துரத்தியடிக்க வெகுண்டெழுக! 

நல்லோர் சாபம் துஷ்டரைப் பஸ்மமாக்கும். ஒரு தரமாவது வெகுண்டெழுந்தால் போதும் கெட்டவர் அடங்கிப் போவர். உறுதி.  

வாழ்வியல் தரிசனம் 26/06/2017

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .