2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

‘பிணைப்புகளின் இறுக்கம் விலக்கப்படக்கூடாது’

Editorial   / 2017 டிசெம்பர் 19 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆழமான அன்பு நிலை, கணவன், மனைவி இரு சாராரிடமும் இருக்க வேண்டும்.

இவர்களில் ஒருவர் தங்களிடையே உறவில் இறுக்கத்தளர்வு ஏற்பட்டால் இருவருமே பாதிப்புக்கு ஆளாகி விடுவர்.

நான், எத்தனை பிரியமாகப் பாசம் கொண்டிருந்தாலும் கூட, என்னைப் என்னைப் புரிந்து கொள்ளவில்லை எனச் சிலர் கவலைப்படுவதுண்டு.

பரஸ்பரம் நம்பிக்கை வைத்துக் கொள்ளா உறவுநிலை தற்காலிகமானது. ஆழமான காதலில் சந்தேகம், காழ்ப்பு, வெறுப்பு உமிழப்படுவதேயில்லை.

ஒருவர் தவறாக நடந்து கொண்டால், எந்தச் சூழலில் அவர் இப்படி நடந்தார், தெரியாமல்தான் அப்படி நடைபெற்றதா எனத் தெளிந்து, பரஸ்பரம் பீறிடும் கோபத்தை ஒடுக்கி, அன்புடன் பேசினால் அத்தனை பிரச்சினைகளும் கழிந்தோடிவிடும்.

களங்கமில்லா அன்பைச் சொரிவதும் அதனை மேம்படுத்துவதும் குடும்பத்தைச் சொர்க்கமாக்கும். எந்தக் கால மாற்றங்களாலும் பிணைப்புகளின் இறுக்கம் விலக்கப்படக்கூடாது. 

வாழ்வியல் தரிசனம் 19/12/2017

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X