Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 ஒக்டோபர் 30 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொட்டும் மழையிலும் நீர், நிலத்தில் உறிஞ்சப்பட வேண்டும். ஆனால், இன்று நகரத்தில் நிலங்கள் பூராவும், கட்டடங்கள் உருவாகி விட்டன. மேலும் கட்டடத்தின் முற்றங்களைக் கூட, சலவைக்கல் அல்லது சீமெந்துக் கலவை மூலம் மெழுகி விடுகின்றார்கள்.
இதனால், உஷ்ணம் பெருகி, மனிதர்களை வதைக்கின்றது. பெருவிருட்சங்களை அழித்து, அழகுக்காக குறோட்டன், நாகதாளி என என்னென்னவோ செடிகளை வளர்த்து அழகுபார்க்கின்றார்கள்.
கிணறு மூலமோ, ஆழ்துளைக் குழாய் மூலமோ நீர் பெற முடியாதுள்ளது. நிலத்தின் ஈரத்தன்மையைப் பேணாமல், பூமியிலிருந்து நீரை எப்படி எடுக்க முடியும்? மரங்கள் மூலம் பசுமை பெற்ற மனிதன், வளிபதனப்படுத்தி மூலம் விறைத்துப் போகின்றான்.
வீசு தென்றல் எங்கே? மழை ஏன் நிலத்தில் விழ மறுக்கின்றது?இயற்கையை அழித்து இன்பம் காண முடியாது. ஏரியை, குளத்தை அழித்து வீடு கட்டுகின்றார்கள். பூமித்தாயைக் கொடுமைப்படுத்தாதீர்கள்!
வாழ்வியல் தரிசனம் 30/10/2017
- பருத்தியூர் பால. வயிரவநாதன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .