2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

‘பேதம் தீரவில்லை; வளர்ந்த வண்ணம் உள்ளது’

Editorial   / 2017 நவம்பர் 15 , மு.ப. 10:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

என் இளமைக் காலத்துத் தோழியே! நான் இன்றைக்கும் நீ வசித்த வீட்டைத் தாண்டும்போது, உன் நினைவுகள் என்னை ஸ்பரிசித்த வண்ணம் இருக்கும். 

நான் சின்னஞ்சிறுவனாகத் தலைநகரில் இருந்தபோது, பக்கத்து வீட்டில் ஒரு மலையாளக் குடும்பம் வாழ்ந்தது. இவர்களின் இனம், மதம், மொழி எல்லாமே எங்களுக்கு அந்நியமானது. ரொம்பவும் ஏழ்மையான குடும்பம். அதில் பத்துப்பேர்கள். இவர்களில் இரண்டாவது பெண் எனக்குத் தோழியானாள். மிகவும் அழகான இவள், என்னைவிட நான்கு வயது கூடியவள். 

‘சின்னத்தம்பி’ என்று என்னைப் பாசத்துடன் அழைப்பாள். என்னை அணைத்தபடி, தான் செல்லும் இடம் எல்லாம் அழைத்துச் செல்வாள். அப்போது எனக்கு மூன்று, நான்கு வயதிருக்கும் என நினைக்கிறேன். அந்தக் குடும்பமே அன்பு மயமானது. பெற்றோர் மலையாளத்திலும் பிள்ளைகள் தமிழிலும் ​பேசுவார்கள். 

1958 ஆம் ஆண்டு பாரிய இனக்கலவரம் நாட்டை உலுக்கியது. இன, மத, மொழி, பேதம் பெரும்பான்மையினரிடம் ஐக்கியமானது. நாங்கள் கப்பலில் ஏற்றப்பட்டு, பருத்தித்துறையில் இறக்கப்பட்டோம். அதன்பிறகு அவர்களை நான் சந்திக்கவில்லை. இன்னமும் இங்கு பேதம் தீரவேயில்லை; வளர்ந்த வண்ணமே உள்ளது. 

     வாழ்வியல் தரிசனம் 15/11/2017

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X