2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

மூளை என்பதே ஓர் அனாவசியப் படைப்பு

Princiya Dixci   / 2016 ஒக்டோபர் 11 , மு.ப. 06:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

தங்களது மூளைக்கு வேலை கொடுப்பது வீணான அலட்டல் முயற்சி என எண்ணி எதனையுமே சிந்திக்காமல் இயங்குபவர்கள் பலர் இருக்கின்றார்கள்.  

அவர்க​ளைப் பொறுத்தவரையில் மூளை என்பதே ஓர் அனாவசியப் படைப்பு என எண்ணுகின்றார்கள் போல அவர்களது கருமங்கள் தோன்றும். 

மானிட வாழ்வில் ஏற்படும் பல இன்னல்களுக்கும் மனிதனே முழுமுதற்காரணமாகின்றான். சின்னச் சின்ன விடயங்களையும் செய்வதற்கு ஆராயாமல் குறுக்குவழியில் பயணித்து அகப்பட்டுக்கொள்கின்றார்கள்.  

எது சரி? எது பிழை? என ஆராய சிந்தனை செய்தே முடிவு எடுக்க வேண்டும். செய்யும் செயலில் தெளிவு இருக்க வேண்டும். ஆன்மபலம் மிளிர்ந்தாலே நல்ல இலட்சியங்களும் முன்நின்று வழிநடத்தும்! தான்தோன்றித்தனம் என்றும் நன்று அல்ல! 

வாழ்வியல் தரிசனம் 11/10/2016

பருத்தியூர் பால - வயிரவநாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .