Editorial / 2017 ஜூலை 03 , மு.ப. 09:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
தனிமைத் தீயில் வெந்துகொண்டிருக்கும்போது, காக்கை, குருவிகளின் சத்தம் தேவகானம் போலிருக்கும்.
வெறுப்பு வரும்போது, அரவணைப்புத் தேவையாக உள்ளது. இதை மனிதர்கள்தான் வழங்க வேண்டும் என்பதல்ல; பிராணிகள், மரம்செடிகள் ஊடாகவும் பெற்றுக் கொள்ளலாம்.
சில்லென்ற காற்று, மெல்லிய மழைத்தூறல், அழகழகான மேகக்கூட்டம், மலர்களின் நறுமண வாசனை, கரையைத் தழுவும் அலைகளின் ஆர்ப்பரிப்பு, அடிவானத்தின் வர்ணஜாலம் என எல்லாமே எங்கள் மனச் சுமைகளை மாற்றிட வல்லவை.
மனிதன் இத்தனை படைப்புகளின் மத்தியில் வாழும்போது, தன்னை மட்டும் தனித்தவனாக எண்ணுதல் ஏற்றுக் கொள்ளக் கூடியதா?
பூமித்தாய் புனிதமானவள். எங்களை என்றும் அரவணைத்தபடி, எல்லாவற்றையும் அள்ளி நமக்கு ஊட்டுகின்றாள். குறை என்ன? நிறைந்த மனத்துடன் வாழ்க.
வாழ்வியல் தரிசனம் 03/07/2017
- பருத்தியூர் பால. வயிரவநாதன்
12 minute ago
24 minute ago
39 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
24 minute ago
39 minute ago