2025 ஒக்டோபர் 15, புதன்கிழமை

‘மனத் தடங்கள் வராது’

Editorial   / 2018 மார்ச் 21 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

சங்கீதத்தின் மூலம் பக்தியுடன் இறைவனை மனம் குளிரச் செய்யும் ஆன்மாவோடிணைந்த சமர்ப்பணமே இறைவன் விரும்புவதாகும்.  

இசைக்கலைஞன் மனம் உருகப் பாடும்போது, இறைவன்பால் எமது நெஞ்சம் சிலிர்ப்பூட்டி ஈர்த்தெழும். ஈசன் நாமத்தைப் பாடுதலும் சொல்லுதலும் பெரும் விரதம் பூணுதல் போலாகும். பாடுவது மட்டுமல்ல, இசைக்கருவிகளை அதனுடன் இணைக்கும்போது, ஈசனும் மெய்யுணர்வுடன் ரசித்த, பெருவரமளிப்பார்.

இந்த நாத அலை, தேகத்திலும் ஆச்சரியமூட்டும். மெல்லிய அதிர்வுடன், புளகாங்கிதமாக்கும். இதயமும் இலேசானால் தீய எண்ணங்கள் கருகிப்போகும். சங்கீத ரசனை ஒருவரம்; இதனால் கிடைக்கும் புது அனுபவம் புது உலகில் சஞ்சாரம் செய்ய வைக்கும்.  மென்மையான கீதமே மனத்துக்கு உகந்தது.

இன்று இடிஇடிக்கும் இசையில், மக்களில் பலர் மயங்கிக் கிடக்கின்றார்கள்.  

நல்ல இசையைக் கேட்க இஷ்டப்படுங்கள். மனத் தடங்கள் வரவே வராது.

வாழ்வியல் தரிசனம் 21/03/2018

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X