2025 ஓகஸ்ட் 29, வெள்ளிக்கிழமை

மனம் அமைதி பெறும் போதே இரசனை தோன்றுகின்றது

Princiya Dixci   / 2016 ஜூன் 30 , மு.ப. 03:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

சில பொழுது தனிமை தேவைப்படுகின்றது. இதுவே எமக்குக் கடும் அவஸ்தையாகிவிடுவதுண்டு.

இந்த நிலவும், அதனைச் சுற்றிப் பரந்த நட்சத்திரக் கூட்டங்கள், நவீன மின்குமிழ்களுக்கு மேலாகத் தங்கள் அழகினைப் பொழிகின்றன.

இவை எல்லாமே, மனது சற்று அமைதியாக இருக்கும் போது மட்டுமே இரசிக்கக் கூடியதாக இருக்கின்றன. எல்லாமே வெறுத்துச் சூனியமான நிலை வரும் போது, நாங்களே தனித்தது போல ஓர் உணர்வு. இதனை உடைப்பது எப்படி?  நெஞ்சினில் நிறைவு ஏற்பட்டால், எல்லாமே அழகுதான். இதனை நிரந்தரமான நிலைக்கு நாம் வைத்திருக்க வேண்டும். உயிர்ப் பொருட்களை இரசிப்பது போல், சடப்பொருட்களையும் எமக்கானது என எண்ணுங்கள்.

அன்புடன் நோக்கும் போது, எல்லாமே எமக்கானது எனும் பூரணத்துவம் இயல்பாகவே ஏற்பட்டுவிடுகின்றது.

உயிர்கள் எல்லாமே தனிமைப்பட முடியாது.

வாழ்வியல் தரிசனம் 30/06/2016
-பருத்தியூர் பால.வயிரவநாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .