2025 டிசெம்பர் 08, திங்கட்கிழமை

மமதைக்கு வெளிச்சத்தைப் பிடிக்காது

Princiya Dixci   / 2016 ஓகஸ்ட் 15 , மு.ப. 03:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

எல்லாமே எனக்குத் தெரியும் என்று வெளியில் பலருக்கும் வாய் சொல்லும். ஆனால் உள் மனமோ, 'அட உனக்கு ஒன்றுமே தெரியாது' எனக் குத்திப் பேசும்.

என்றாலும் மமதை மனதை அடக்கி, அச்சுறுத்திப் பொய் பேச வைக்கும். மமதைக்கு வெளிச்சத்தைப் பிடிக்காது. தனது ஆட்சிக்குள் எஜமானனை மீறியே செயற்படும்.

எனினும், எல்லாச் சமயத்திலும் நல்ல அறிவுத் திறனுடையவர்களை ஆணவத்தினால் வென்றுவிட முடியாது.

புலன் வழிசெல்லாமல் இருக்க அறிவுக்கு வேலை கொடுங்கள். தன்முனைப்புடன் செயற்பட்டால் பிறர் நகைக்க வாழ்வதுடன், கிடைக்க வேண்டிய பெரும் பேறுகளை வேறு திசைக்கே திருப்பிவிடும்.

கௌரவமாக வாழ இறுமாப்பு, செருக்கு, அதிகார மிடுக்கு ஆகியவை மிகவும் அவசியமானது எனத் தப்பான எண்ணங்களை வரைந்து கொள்வதுபோல் அறியாமை வேறில்லை.

பணிவோடு உண்மைக்கும் அன்புக்கும் தலை வணங்கினால் நிலை பெற்ற வாழ்வு நிச்சயம்.  

வாழ்வியல் தரிசனம் 15/08/2016
-பருத்தியூர் பால.வயிரவநாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X