2024 மே 20, திங்கட்கிழமை

‘மமதையின் உச்சம் இது’

Editorial   / 2017 ஜூலை 13 , மு.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

நான்தான் செய்தேன்; என்னால்த்தான் எல்லாமே முடியும்; வேறு ஒருவராலும் முடியாது, என்பது மமதையின் உச்சம்.  

கடவுளின் கிருபையினால் எல்லாமே அருளப்படுகின்றது என எண்ணினால் என்ன குறைந்துவிடப் போகின்றது? 

மாறிவரும் யுகத்தில், தனிமனிதன் ஒருவனே எல்லாமே அறிந்தவன், தெளிந்தவன் என்பதில்லை. எக்கணமும் வல்லவர்கள் உருவான வண்ணமே இருக்கின்றனர். இதில் யார் பெரியவன், பெரியவள் என்ற பேச்சுக்கே இடமில்லை.  

அறிவுக்கு எல்லைகள் வகுக்க முடியாது. எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும் என்பதுவே இறை சித்தம்.  

எனவே, எனக்கு மட்டும்தான் எல்லாமே என எண்ணுதல் அறியாமை இல்லையா?  கொடுக்கின்ற கடவுளிடம் இருந்து எடுக்கிறவன் நாம் மமதை கொள்ளலாகாது.  

   வாழ்வியல் தரிசனம் 13/07/2017

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X