2024 மே 20, திங்கட்கிழமை

‘மரணம் கசக்கும் உணர்வு’

Editorial   / 2017 ஓகஸ்ட் 15 , மு.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

அந்தத் தாத்தாவின் பேரனுக்கு குழந்தை பிறந்துவிட்டது. அவருக்கு பூட்டன் என்று பெயர் சொல்லப் புதிய வாரிசு அல்லவா? வீட்டில் ஒரே குதூகலம். அவரைச் சுற்றிப் பிள்ளைகள், பேரன்கள் தங்கள் களிப்பை வெளிப்படுத்தினார்கள். 

ஆனால், தாத்தாவின் முகத்தில் ஒரு சோகம் குடிகொண்டிருந்தது. “ஏன் தாத்தா ஒரு மாதிரியாக இருக்கின்றீர்கள்” என்று பேரன்கள் கேட்க, தாத்தா சொன்னார். “நான் என் பூட்டனின் கல்யாணம், கச்சேரிகளைப் பார்ப்பேனா என நினைத்ததும் கவலை வந்துவிட்டது” என்றார்.  

பத்துப் பிள்ளைகள், 25 பேரப்பிள்ளைகள் இப்போது பூட்டனும் பிறந்துவிட்டான். இனிமேலாவது சந்தோசப்படாது, தன் ஆயுள் விருத்தியைப் பற்றிக் கவலைப்படுகின்றார். 

முதுமையிலும் கூட, உலகவாழ்வின் யதார்த்தம் பற்றி, இன்னமும் பலருக்குப் புரியாமல் இருக்கின்றது. மரணம்  கசக்கும் உணர்வு என்று எல்லோரையும் பயப்படுத்திவிடுகின்றது. இறைவனிடம் சரணடையும் பாக்கியத்தை மரணம் எற்படுத்துகின்றது என்பதை உணர்க. 

   வாழ்வியல் தரிசனம் 15/08/2017

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X